File:ஜேஷ்டா தேவி.jpg
Original file (3,456 × 4,608 pixels, file size: 4.68 MB, MIME type: image/jpeg)
Captions
Summary
[edit]Descriptionஜேஷ்டா தேவி.jpg |
தமிழ்: ஜேஷ்டா தேவி
ஜேஷ்டா என்றால் சேட்டை என்று பொருள். தேவர்களுக்காக பார்க்கடல் கடையும் சமயத்தில் முதல் முதலில் வெளிவந்ததால் மூத்ததேவி அல்லது முதல் தேவி என்று அழைக்கப்படுகிறாள். ஆதிகாலத்தில் பக்தர்களால் துதிக்கப்பட்டவர்கள் 2 பேர். ஒன்று கொற்றவை என்று அழைக்கப்படும் கருணையின் வடிவான காளி தேவி. மற்றொருவள் தத்திரத்தை விளக்கவல்ல, வெற்றிகளை வாரி வழங்கவல்ல, ஞானத்தையும் முக்தியையும் தரவல்ல தவ்வை என்று அழைக்கப்பட்ட ஜேஷ்¼¡ தேவி. கால சக்கரத்தின்மேல் அமர்ந்து மக்களின் கருமவினைகளை தீர்த்து தரவல்ல தசமகா வித்தையில் 7வது தேவியாய் வீற்றிருக்கக்கூடிய புகை வடிவமான அம்பிகையே தூமாவதி. ஒவ்வொரு வீட்டிலும் இறை வழிபாட்டின்போது திருவிளக்கு ஏற்றியபிறகு தூபதீபம் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த புகை ãÄõ ஒவ்வொரு வீட்டிலுல்ல தத்துரங்களையும் பிரச்சனைகளையும் போக்கித்தருகிறாள். அம்பாளின் திருக்கோலம் தேரில் வலது காலை மடக்கி இடது காலை சக்கரத்தின்மேல் வைத்து 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். முதல் கரத்தில் துடப்பத்தையும் மற்றொரு கரத்தில் நெருப்பில் இருந்து வெளி வரக்கூடிய புகையையும் மூன்றாவது கரத்தில் அபயம் மற்றும் நான்காம் கரத்தில் அட்சய பாத்திரம் வைத்துக்கொண்டு அருள் பாலிக்கிறாள். நமது ஆலயத்தில் கல் விக்ரகத்தில் கழுதை மேல் அம்பாள், குளிகன், குளிகை பிரதஷ்டை செய்ய உள்ளனர். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார். பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். அவள் ஏன் மஹா வித்யாவின் ஒரு தேவியானாள்? அதற்குக் காரணம் அவள் பராசக்தியின் ஒரு அவதாரம்தான், அசுரனை வதம் செய்ய படைக்கப்பட்டவள்தான் என்பதினால் அவளுக்குள்ள சக்தியின் குணம் போய்விடுமா என்ன? சிலரை அழிக்க சில ரூபங்கள் தேவை. ஆகவேதான் தூமாவதியாக தோன்றி இருந்தாலும் அவள் மிகவும் கருணை மிக்கவளாகத் திகழ்கிறாள். தன்னை சரணடைந்து வந்தவர்கள் கேட்கும் வரம் அனைத்தையும் தர வலிமை உள்ளவள். பெண்களுடன் அதிகம் வசிப்பவள். குழந்தை பாக்கியம் தருபவள். மரணம் அடைந்தவர்களை நல்ல லோகத்துக்கு அனுப்பி வைப்பவள். காம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, கிரேக்க தேசம் என உலகின் பல்வேறு நாடுகளிலும் அரிசி தேவதை என்பவள் போற்றி வணங்கப்படுகிறாள். அங்கெல்லாம் அரிசி தெய்வத்தை ‘தேவி ஸ்ரீ’ (Dewi Shree) என்கிறார்கள். நெல்லின் உள்ளே இருந்து முற்றிய அரிசி தானியம் வெளிவரத் துவங்கும் காலத்தை தானியத்தின் செடி கர்பமுற்றுள்ள காலம் எனக் கருதுகிறார்கள். ஆகவே செடிகளிலும் உயிர் உள்ளது என்ற தத்துவத்தை நம்புகிறார்கள். உயிருள்ள அனைத்திலுமே ஆத்மா எனும் ஜீவன் உள்ளது, ஒரு மரணம் நிகழும்போது அதற்குள் உள்ள ஜீவன் பறந்துவிடும். அது திரும்ப வருவது இல்லை. அது போலவே ஒருமுறை நெல்லில் இருந்து அரிசியை வெளியில் எடுத்து விட்டால் அந்த நெல் உபயோகம் இல்லாமல் ஆகிவிடுகின்றது. ஆத்மாவும் உடலும் போன்ற நிலை அது. மூதேவி எனும் ஜேஷ்¼¡ தேவியானவள் அவளை ஆராதிப்பவர்களது இதயத்தில் அமர்ந்து கொண்டு அங்குள்ள தீய எண்ணங்கள் எனும் தீமைகளை அகற்றி, இதயத்துக்குள் இயற்கையாக மெல்ல மெல்ல துளிர் விட்டபடி இருக்கும் தெய்வீகம் எனும் நல்லவற்றை இன்னும் பக்குவப் படுத்துகிறாள் என்பது அது காட்டும் தத்துவம். அரிசி உணவை உண்பது தென் இந்தியா மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் (ஒரிஸ்ஸா, வங்காளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா போன்ற பல இடங்கள்) அதிகம் உண்டு. அதனால்தானோ என்னவோ எதேச்சையாக மூதேவி எனும் ஜேஷ்¼¡ தேவியின் வழிபாடு இந்த பகுதிகளில் அதிகம் உள்ளது. முறம் எனும் சின்னம் எதைக் காட்டுகிறது? அனைத்து நெல் தானியங்களையும் முறத்தில் போட்டு புடைத்து உமி, மண், தவிடு, கல் போன்றவற்றை விலக்கி எடுத்துவிட்டு நல்ல தானியங்களை பிரித்து எடுப்பார்கள். ஆகவே மூதேவி எனும் ஜேஷ்டா தேவியின் கையில் உள்ள முறம் என்பது காட்டும் தத்துவம் என்ன என்றால் அரிசியை முறத்தில் போட்டு நல்ல தானியங்களை பிரித்து எடுப்பது போல அந்த தேவியிடம் சென்று சரண் அடையும் ஆத்மாக்களில் உள்ள தீய எண்ணங்களையும், தீமைகளையும் அகற்றி அவை நல்ல வழியில் நடக்க வழி வகுக்கிறாள். அரிசி நெல்லை முறத்தில் போட்டு புடைத்து நல்ல அரிசியை பிரித்தெடுக்கும் முன்னால் அந்த நெல்லை உரலில் போட்டு நன்றாக இடித்து அதற்குப் பிறகே அதை புடைப்பார்கள். முறத்தில் போட்டு புடைக்கும்போது காற்றில் அதனுடன் கிடக்கும் தூசிகள் அனைத்தும் பறந்து போய் கீழே விழுந்து விடும். இதே போலத்தான் ஜேஷ்¼¡ தேவி தீய எண்ணங்கள் கொண்டவர்களையும், தீமைகளை செய்பவர்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஏராளமான சோதனைகளையும், துன்பங்களையும் தந்து அவர்கள் தாம் செய்யும் தவறுகளை உணரச் செய்கின்றாள். துன்பத்தையும், துயரத்தையும் தாங்க முடியாமல் போகும்போது அவர்கள் தமது தவறுகளை உணரத் துவங்கி, கடவுளிடம் சரண் அடைகின்றார்கள். அந்த நிலைக்கு சென்று திருந்தத் துவங்கும்போது அவள் அவர்களை தன் பிடியில் இருந்து விடுதலை செய்கின்றாள். . அப்போது அவர்களுக்கு பூரணமான தெய்வ நம்பிக்கை ஏற்படத் துவங்க தெய்வங்களை வழிபடத் துவங்குகிறார்கள். அந்த நேரத்தில் ஜேஷ்டா தேவி அவர்களுடைய தரித்திர வாழ்க்கையில் இருந்து அவர்களை விடுதலை செய்கின்றாள். இப்படியான வழியில் தெய்வீகத்தை ஒருவர் வாழ்க்கையில் உணர வைக்கவே ஜேஷ்டா தேவி அவதரிக்கப்பட்டு இருக்கின்றாள். என்ன ஆனாலும் சரி தாம் திருந்தவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு தீமைகளை செய்தவண்ணம் இருப்பவர்கள் இன்னும் அதிக தரித்திர நிலையையும், துன்பங்களையும் அடைகின்றார்கள். பிறக்கும் எவருமே தவறுகள் செய்பவர்கள் அல்ல. சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் ஒருவரை நல்லவனாகவும், கெட்டவர்களாகவும் ஆக்குகின்றன. முறத்தைக் கையில் உள்ள வேறு எந்த தெய்வத்தையும் காணவே முடியாது. ஜேஷ்டா தேவி தூய்மையற்ற இடங்களில் வசிக்கின்றாள் என்பது ஆன்மீக கண்ணோட்டத்தில் என்ன என்றால் அவள் அழுக்கடைந்த மனதோடு உள்ளவர்களிடம் இருந்து கொண்டு அவர்களது தீய எண்ணங்களை விலக்கி வறுமையை ஒழிக்க அவர்களை லஷ்மி தேவியிடம் அனுப்புகின்றாள் என்பதேயாகும். அதைப்போல தூய்மையான இடங்களிலேயே லஷ்மி தேவி வாசம் செய்கின்றாள் என்பது ஜேஷ்டா தேவி மூலம் தீய எண்ணங்கள் விலகி தூய்மையான எண்ணங்களுடன் இருக்கையில் லஷ்மி தேவி அவர்களிடம் வந்து அவர்களுக்கு அருள் புரிகின்றாள் என்பதைக் குறிக்கும் நிலை ஆகும். இப்படியாக சகோதரிகளான லஷ்மி தேவி மற்றும் ஜேஷ்டா தேவி ஆகிய இருவரும் ஒரே அம்சத்தின் இருபுறங்கள் ஆவார்கள். ஜேஷ்டா தேவி ஒருவருடைய தீய எண்ணங்களையும், தீய குணங்களையும் மாற்றி அமைத்து அவர்களை நல்வழிப்படுத்துபவளே. தனது தேரை இழுக்கும் காக்கையை அங்கு போடப்படும் பிண்டங்களை தின்னச் செய்து, அதன் மூலம் அந்த ஆத்மாக்களின் பசியைப் போக்கி மேலுலகத்துக்கு அனுப்புகிறாளாம். ஆகவே காக்கை ஜேஷ்டா தேவிக்கு சேவகம் செய்யும் பறவை. அது மட்டும் அல்ல யமதர்மராஜரின் தூதுவர் மற்றும் அவருடைய சகோதரராக கருதப்படும் சனி பகவானுக்கும் காக்கையே வாகனம் என்பதினால் யமராஜர், சனி பகவான் மற்றும் ஜேஷ்டா தேவிக்கு இடையே நெருங்கிய தொடர்ப்பு உள்ளது என்பதாக ஆன்மீக நம்பிக்கை உள்ளது. இதனால்தான் ஜேஷ்டா தேவியை வழிபட்டால் யம கணங்கள் மூலம் கிடைக்கும் தண்டனை குறைந்து யம பயம் விலகும் என்று அந்த காலங்களில் நம்பினார்கள். தந்தரீக சாதனாக்களை செய்பவர்கள் ஜேஷ்டா தேவியே யமராஜர் மற்றும் சனிபகவானுக்கு அதிபதியாவார் என்பதாக நம்புகின்றார்கள். இதனால் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் யமராஜர், சனிபகவான் மற்றும் ஜேஷ்டா தேவிக்கும் சேவகம் செய்யும் பறவையான காக்கையை வணங்கினார்கள். சனி பகவானுக்கு வாகனம் காக்கைதான். அதே காக்கைதான் ஜேஷ்டா தேவியின் தேரை இழுக்கும் பறவையும் ஆகும். அவளது கொடியிலும் காக்கையின் உருவம் உள்ளது. இதனால்தான் இருவருக்கும் பொதுவான அம்சமாக காக்கை இருப்பதினால் சனியின் தொல்லை இன்றி இருக்க வேண்டும் எனில் ஆலயங்களில் சென்று ஜேஷ்டா தேவியை ஆராதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஜேஷ்டா தேவிக்கு அவளது கட்டளைக்கு ஏற்ப காக்கையை வாகனமாக சனி பகவானே அனுப்பி வைத்தாராம் என்பதினால் சனிபகவான் மீது ஜேஷ்டா தேவிக்கு அதிகாரம் உள்ளது புலப்படும். யமராஜருக்கும் காகமே தூதுவர். ஆகவே மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்கள், அவர்களுடைய செயல்கள் ஒருவருக்கொருவருடன் முரண்படுவதில்லை என்பது தெளிவாகும். இறந்தவர்களது உடல் எரிக்கப்பட்டதும் அதில் இருந்து வெளியேறும் ஆத்மா அந்த சுடுகாட்டில் எரிக்கப்பட்ட உடலின் மேற்பகுதியிலேயே சில காலம் சுற்றித் திரிந்தப் பின் மேலுலகம் செல்லும். அந்த ஆத்மாக்களை ஜேஷ்டா தேவி வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பாள். அப்போது அங்கு சுற்றித் திரியும் சில ஆத்மாக்கள் ஜேஷ்டா தேவியை அடையாளம் கண்டு கொண்டு அவளிடம் அடைக்கலம் ஆகி தாம் அறியாமையில் செய்துவிட்ட பிழைகளை மன்னித்து காக்குமாறு வேண்டிக் கொள்ளும்போது கருணை கொண்டு அந்த தேவியும் அந்த ஆத்மாக்களின் தீமைகளை விலக்கிவிட்டு, ஆத்மாக்களை தூய்மைப்படுத்தி மேலுலகத்துக்கு அனுப்பும்போது அவர்களுக்கு யம கணங்கள் தொல்லைகளைத் தரமாட்டார்கள். உயிருடன் இருக்கையில் தம்மை வணங்கித் துதித்ததினால் அந்த ஆத்மாக்களை நல்ல பிறவி எடுக்கும் வகையில் அங்கிருந்து அனுப்பி வைக்கிறாள். பண்டிதர்களின் கூற்றின்படி அனைத்து ஆத்மாக்களும் ஜேஷ்டா தேவியை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அவை பூமியிலே இருந்தபோது செய்த நன்மைகளின் அளவைக் கொண்டு அவற்றால் ஜேஷ்டா தேவியை அடையாளம் கண்டு கொள்ள முடியும் எனும் நிலையில் பரமாத்மன் நியதியை வைத்து உள்ளார். |
Date | |
Source | Own work |
Author | Thaanthondribaba |
Camera location | 12° 47′ 55.03″ N, 80° 00′ 24.58″ E | View this and other nearby images on: OpenStreetMap | 12.798620; 80.006828 |
---|
Licensing
[edit]- You are free:
- to share – to copy, distribute and transmit the work
- to remix – to adapt the work
- Under the following conditions:
- attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
- share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.
File history
Click on a date/time to view the file as it appeared at that time.
Date/Time | Thumbnail | Dimensions | User | Comment | |
---|---|---|---|---|---|
current | 15:37, 6 October 2018 | 3,456 × 4,608 (4.68 MB) | Thaanthondribaba (talk | contribs) | User created page with UploadWizard |
You cannot overwrite this file.
File usage on Commons
There are no pages that use this file.
Metadata
This file contains additional information such as Exif metadata which may have been added by the digital camera, scanner, or software program used to create or digitize it. If the file has been modified from its original state, some details such as the timestamp may not fully reflect those of the original file. The timestamp is only as accurate as the clock in the camera, and it may be completely wrong.
Camera manufacturer | vivo |
---|---|
Camera model | vivo 1716 |
Exposure time | 10/167 sec (0.059880239520958) |
F-number | f/2 |
ISO speed rating | 1,136 |
Date and time of data generation | 21:57, 18 August 2018 |
Lens focal length | 3.55 mm |
Latitude | 12° 47′ 55.03″ N |
Longitude | 80° 0′ 24.58″ E |
Altitude | 37 meters below sea level |
Horizontal resolution | 72 dpi |
Vertical resolution | 72 dpi |
Software used | msm8953_64-user 7.1.2 N2G47H eng.compil.20180528.223559 release-keys |
File change date and time | 21:57, 18 August 2018 |
Y and C positioning | Centered |
Exposure Program | Not defined |
Exif version | 2.2 |
Date and time of digitizing | 21:57, 18 August 2018 |
Meaning of each component |
|
APEX shutter speed | 4.058 |
APEX aperture | 2 |
APEX brightness | −2.55 |
Metering mode | Center weighted average |
Flash | Flash did not fire |
DateTime subseconds | 253462 |
DateTimeOriginal subseconds | 253462 |
DateTimeDigitized subseconds | 253462 |
Supported Flashpix version | 1 |
Color space | sRGB |
Sensing method | One-chip color area sensor |
Scene type | A directly photographed image |
Exposure mode | Auto exposure |
White balance | Auto white balance |
Focal length in 35 mm film | 4 mm |
Scene capture type | Standard |
GPS time (atomic clock) | 16:26 |
GPS date | 18 August 2018 |